
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் – மழை பாதிப்புகளால் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகளை சரி செய்வதற்காக 5000 கோடி நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிற்கு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தை பிரதமரிடம் நாடாளுமன்ற திமுக நாடாளுமன்ற குழு தலைவர் TR. பாலு நேரில் வழங்கி இருக்கிறார்.
அந்த கடிதத்தை வழங்கிய பின்னர் முதலமைச்சர் இடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார். அப்போது மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், தற்போதைய சூழ்நிலை உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேட்டு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி மழை – வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜநாத்சிங் இன்று சென்னை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொள்ள நிலையில் முதலமைச்சரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி இருக்கிறார்.