திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் அராஜகம் செய்யும் டெல்லி எஜமானர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்.

இபிஎஸ் கல்வி உரிமை சட்டத்தின் படி தனியார் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அரசின் ஆதிக்கத்தை கேள்வி கேட்க துப்பில்லாத பாஜகவின் எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு அரசு பற்றி அவதூறு பேசியுள்ளார்.

வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மேலும் ஒரு படுதோல்வியை பரிசாக தந்து எடப்பாடி பித்தலாட்டங்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க காத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.