
உச்ச நீதிமன்றத்தில் 48 மணி நேரத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நள்ளிரவில் அவசரமாக தேர்தல் ஆணையரை நியமித்தது எதற்கு?. உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியதன் மூலமாக நாட்டின் கோடிக்கணக்கான வாக்காளர்கள் வைத்திருந்த நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது.
நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருக்க, பிரதமரும், உள்துறை அமைச்சரும் இரவோடு இரவாக புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்திருப்பது அவமரியாதைக்குரியதாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.