சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல் நிலைய மரண வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவ கல்லூரி டீன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை தொடங்கியது. திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத் கோயில் உதவி ஆணையர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரியின் ஆகியோர் ஆஜாராகினர்.

அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாக்கியுள்ளது. அவரது உடம்பில் ஒரு பாகத்தை விடாமல் தாக்கப்பட்டுள்ளார். பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித் குமார் சாகும்வரை அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்ற எஃப் ஐ ஆர் செய்யப்படவில்லை.

அஜித்குமார் கொலையை சம்பவத்தில் இப்போது அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்கக்கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.