அதிமுக நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக ஆண்டி அம்பலத்தை விட 11,900 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதை எதிர்த்து திமுக ஆண்டி அம்பலம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்த எந்த காரணமும் இல்லை என்பதால் திமுக ஆண்டி அம்பலம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான காரணங்கள் உள்ளதாக கூறி அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.