பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இருவரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக அன்புமணி ராமதாஸ் பாமகவின் நிர்வாகிகளை தலைவர் பொறுப்பில் உள்ள தன்னால்தான் நீக்க முடியும் என்று அன்புமணி கூறியிருந்தார். இது தொடர்பாக ராமதாஸிடம் கேட்டதற்கு சட்ட விதிகளை இன்னும் பார்க்கவில்லை பார்த்துவிட்டு  கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது பாமக தலைவர் நிர்வாகக் குழுவில் அன்புமணி ராமதாஸை, பாமக நிறுவனர் ராமதாஸ் நீக்கிவிட்டு புதிய நிர்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். புதிய நிர்வாகக் குழுவில் ஜி கே மணி, சிவப்பிரகாசம், பு.தா அருள் மொழி, அருள், கவிஞர் ஜெயபாஸ்கரன், பேராசிரியர் தீரன், ஏ கே மூர்த்தி உள்ளிட்ட 21 பேர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக அன்பு மணியால் நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.