சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நாங்கள் இத்தனை வருடமாக கட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஒரு தேர்தலை கூட நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று சொல்லவில்லை. நாங்கள் மக்களிடம் திரும்பத் திரும்ப வேலை செய்கிறோம். மக்கள் கொடுக்கின்ற வாக்குகளை வாங்குகிறோம்.

எங்கள் ஆதரவை பலப்படுத்திக் கொண்டே வருகிறோம். அதனால் எந்த தேர்தலை பார்த்தும் பிஜேபிக்கு பயம் இல்லை. நாங்கள் அரசியல் கட்சியாக இருப்பதே தேர்தலில் நின்று மக்களோடு ஆதரவை வாங்குவதற்கு தான். ரஜினிகாந்த் அவர்கள், திரு.கமலஹாசன் அவர்கள், இன்னும் நீங்கள் எத்தனை நடிகர்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்…

எல்லா நடிகர்களிடமும் நாங்கள் ஆதரவு கேட்போம். எந்த நடிகர்,  நடிகையாக இருந்தாலும்…  ஏன் உங்களிடம் கூட நாங்கள் ஆதரவு கேட்பது எங்களுடைய வேலை. உங்கள் எல்லோரிடமும் நாங்கள் ஆதரவு கேட்போம். கொடுப்பதும்,  கொடுக்காததும் உங்களுடைய விருப்பம். நான் தான் சொல்லிவிட்டேன்…  விஜய் மட்டுமல்ல,    யாரிடம் வேண்டுமானாலும் நாங்கள் ஆதரவு கேட்போம் என தெரிவித்தார்.