
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா. இருவரும் சில நாட்களுக்கு முன்பாக போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் வருகிற ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்குமாறு கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஸ்ரீகாந்த் போதை பொருள் தடுப்பு சிறப்பு கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோன்று கிருஷ்ணாவும் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இருவரின் வழக்கையும் விசாரித்த நீதிபதி அவர்களின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டார்.
மேலும் இருவருக்கும் போதைப்பொருள் வினியோகம் செய்தது தொடர்பாக அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது இருவரும் போதை பொருள் சப்ளையரான கெவின் கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.