நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்க பட்டிருந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று காலை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவாளிகளான முன்னாள் அதிமுக நிர்வாகி அருளானந்தம், அருண்குமார், பாபு, மணிவண்ணன், ஹெரோன்பால், சதீஷ்குமார், திருநாவுக்கரசு, வசந்த் மற்றும் சபரி ராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இன்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை வழங்கிய நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார்.

குற்றவாளிகள் அழித்த ஆதாரங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டதால் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதோடு பாதிக்கப்பட்ட பெண்களும் சிபிஐ அதிகாரிகளிடம் உண்மையைத் துணிச்சலாக கூறினர். இந்நிலையில் அரசு தரப்பில் குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட நிலையில், சிபிஐ வழக்கறிஞர் குற்றவாளிகள் அனைவருக்கும் உச்சபட்ச தண்டனையாக சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதோடு பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று  நண்பகல் 12:00 மணிக்கு தீர்ப்பு விவரம் வெளியாகியுள்ளது.