
தி.மலை செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராடிய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், 7 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை காவல்துறை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.