நாடாளுமன்றத்தில் சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பல்வேறு பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்ட நிலையில் சில பொருட்களுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டது. அந்த வகையில் ஆய்வக வேதிப்பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது.

அதன்படி சுமார் 40,000 ஆய்வக வேதிப்பொருட்களுக்கு 150 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. இந்தக் கடுமையான வரி விதிப்பின் காரணமாக நாடு முழுவதும் பல ஆராய்ச்சிகள் முடங்கியது. மேலும் இதன் காரணமாக தற்போது இந்த 150 சதவீத சுங்கவரியை திரும்ப பெற்றுக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.