ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இது 2-வது பெரிய வெற்றி ஆகும்.