
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலமாக இந்தியா பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதனால் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று 14 நகரங்களில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த நிலையில் இன்று நேற்று நடந்த தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
இந்த பேட்டியின் போது கர்னல் சோபியா குர்ஷி பாகிஸ்தான் பல பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடுகிறது என்றும் ஆனால் இதனை இந்தியா தவுடுபிடியாக உள்ளது என்றும் கூறினார். அதாவது இந்தியாவின் S400 தடுப்பை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் கூறியது முற்றிலும் பொய்.
அதன்பிறகு இந்தியாவின் ஆயுத கிடங்குகளை பாகிஸ்தான் தாக்க முயன்ற நிலையில் ஸ்ரீநகர் முதல் சாலியா வரை மொத்தம் 26 நகரங்களை குறி வைத்தது. ஆதன்பூர், பதான் கோட் ராணுவ தளங்களுக்கு சிறிய அளவில் செய்த மேற்பட்டுள்ளது.
பிரமோஸ் ஏவுகணை தளத்திற்கு எந்த சேதமும் இல்லை. பஞ்சாப் விமானப்படை தளத்தை குறிவைத்து அதிகாலை 1:40 மணியளவில் பாகிஸ்தான ஏவுகணையை ஏவியது. மேலும் துல்லியமான தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் மூலமாக இதனை இந்தியா முறியடித்தது என்று கூறினார்.