தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் தமிழகத்தில் மொத்தமாக 95.3% வரை தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.