கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் தற்போது வரை உயிரிழந்து உள்ள நிலையில் சற்று முன் பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் 10 பேருக்கு கண்பார்வை பறிபோய் உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் 44 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீதமுள்ள 35க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதனைப் போலவே சிலருக்கு கண் பார்வை மங்கலாக தெரிவதாக மருத்துவரிடம் கூறியுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சமும், சிகிச்சையில் இருப்பவர்களுக்கு 50000 ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.