இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி கந்தகோட்டம் பகுதியில் பேரணி நடத்த அனுமதி கோரி மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், திருப்பரங்குன்றம் மலைப் பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவது தேவையில்லாத பிரச்னையை உருவாக்கும். பேரணி நடத்த அனுமதி கேட்டுள்ள இடம் கூட்ட நெரிசல் மிகுந்தது. திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும், இந்த இடத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்கப் பார்க்கிறீர்கள்” என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இன்று அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கூறியதாவது,  பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது. திருப்பரங்குன்றம் மலையில் இந்து, இஸ்லாமிய, ஜெயின் மக்கள் அமைதியாக வசித்து வருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம் என கூறியுள்ளார்.