தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியானது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் புதிதாக ஒன்பது இடங்களில் தொழில்பேட்டை அமைக்கப்படும். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பண பலன், 10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்தை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகுதியில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம். அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம் இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்றி விளம்பர அறிவிப்புகளே என விமர்சித்துள்ளார்.