
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 36310 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றதால் மீண்டும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்கிறது.