தஞ்சை வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அவரின் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் பசுமை புரட்சியை முன்னின்று நடத்தியது முதல் இந்தியாவின் பெண் விவசாயிகளுக்கு அங்கீகாரம் வாங்கியது வரை எம் எஸ் சுவாமிநாதனின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் முதல்வர் புகழாரம் சூட்டினார்.