நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் விதிகளை மீறி செயல்பட்டதாக நான்கு கவுன்சிலர்களை நகராட்சி நிர்வாகத்துறை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில் சென்னை 199-வது வார்டு கவுன்சிலர் பாபு, சென்னை ஐந்தாவது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தாம்பரம் 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி 11-வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா ஆகியோர் நீக்கப்பட்டனர்.