விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தற்போது 1.40 மணி நிலவரப்படி அன்னியூர் சிவா 1,06,908 வாக்குகள் பெற்றுள்ளார். அவர் மொத்தம் 59785 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். மேலும் இதன் மூலம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் வெற்றி உறுதியாகி உள்ளது.