டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 2024 லோக்சபா தேர்தலுக்கான தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.  543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதல் கட்டமாக 195 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். 2014 மக்களவைத் தேர்தல் முதல் வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

மேலும் 28 பெண் வேட்பாளர்கள் 47 இளைஞர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.