
நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில் புதிய வருமான வரி முறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி தாக்கல் செய்வது காலதாமதம் ஆனால் அது இனி கிரிமினல் குற்றமாகாது என அறிவித்துள்ளார்.
அதன் பிறகு தனிநபர் வருமான வரி சாக்கலுக்கான நிலையான வரி கழிப்பு ரூ.50000-ல் இருந்து ரூ.75000 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய வருமான வரி முறையில் ரூ.3 லட்சத்திலிருந்து வரிமுறை இல்லை எனவும், ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சத்திற்கு 5 சதவீத வரியும், ரூ.7 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை 10 சதவீதம் வரியும், 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை 12 சதவீத வரியும், 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20% வரியும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய வருமான வரிமுறையின் கீழ் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளதால் இனி ஊழியர்கள் வருடத்திற்கு ரூ.17,500 வரை சேமிக்க முடியும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.