கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதோடு கடும் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. இதனால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததோடு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் இன்றும் இரண்டாவது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது கேரள மாநிலத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறி இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றும் பலத்த கன மழை பெய்தால் நிலச்சரிவு ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.