
சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வைர வியாபாரி. இவர் வைரங்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வரும் நிலையில் மற்றொரு வியாபாரி சந்திரசேகரிடம் இருந்து வைரம் கேட்டுள்ளார். அதன்படி சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைரங்களை எடுத்துக்கொண்டு வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சந்திரசேகர் சென்ற நிலையில் இந்த ஹோட்டல் அறையில் மறைந்திருந்த நான்கு பேர் சந்திரசேகரை தாக்கிய வரை கட்டிப்போட்டுவிட்டு அவரிடம் இருந்த வைரங்களை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக வடபழனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது 4 பேரையும் கைது செய்துள்ளனர். தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்த நிலையில் சிவகாசி அருகே குற்றவாளிகள் காரில் சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது தூத்துக்குடி காவல்துறையினர் அதிரடியாக மடக்கி பிடித்து கைது செய்தனர். அதன்படி லண்டன் ராஜன் உட்பட 4 பேர் பிடி பட்டுள்ள நிலையில் அவர்களை சென்னைக்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் நகை வாங்க வருவது போல் நடித்து வியாபாரியிடம் இருந்து வைர நகைகளை கொள்ளையடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.