
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில் அடுத்தடுத்து 6 பேர் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 7-வதாக ஒருவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது யுவராஜ் என்பவரை காவல் துறையினர் கைது செய்த நிலையில் அவரை கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பாக ஆஜர் படுத்தினர்.
அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் முன்னதாக நூறு கோடி ரூபாய் நிலமோசடி வழக்கில் எம் ஆர் விஜயபாஸ்கரின் தம்பி சேகர் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.