
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டள்ளார். மேலும் சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை காவல் ஆணையர் அளித்துள்ள பேட்டியில், ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி. அவர்களுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசியுள்ளார்.