திருப்பூரில் இருந்து ஆந்திராவுக்கு ரயிலில் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ரயில் வேலூர் அருகே சென்றபோது கழிவறைக்கு சென்றுள்ளார்.அப்போது மது போதையில் இருந்த வாலிபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கே.வி குப்பம் பகுதியைச் சேர்ந்த ஹோமராஜ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே நான்கு மாத கர்ப்பிணியின் வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டதாக தகவல் வெளியானது இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான மருத்துவ செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.