தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். இவருக்கு துரை தயாநிதி என்ற மகன் இருக்கிறார். இவர் பிரபல தொழிலதிபர் மற்றும் சினிமா படங்கள் தயாரிப்பாளர். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அதாவது அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் அலுவலக மின்னஞ்சலில் நேற்று இரவு கொலை மிரட்டல் செய்தி வந்தது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சை பெறும்  மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.