
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு வாங்கி வரும் நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அஸ்வின் ரவிச்சந்திரன் ஏலத்தில் எடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடிய நிலையில் மீண்டும் சிஎஸ்கேவுக்கு திரும்பியுள்ளார். அவரை ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சிஎஸ்கே. மேலும் அஸ்வின் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.