சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72, 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஒரு கிராம் 9020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலைய மீண்டும் உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 9840 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.