
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1120 ரூபாய் வரையில் அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 72,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கிராமுக்கு 20 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 9080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 9906 ரூபாய்க்கும் ஒரு சவரன் 79 ஆயிரத்து 248 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு இரண்டு ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 113 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 113000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.