காய்கறி சந்தையில் இன்று மீண்டும் தக்காளி விலை உயர்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்ததால், மீண்டும் ரூ. 120க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இது சென்னையில் மட்டும் நடைமுறையில் இருப்பதால், மற்ற மாவட்ட மக்கள் விலை உயர்வால் வேதனைப்படுகின்றனர்.