
ராஜஸ்தான் மாநிலம் ரத்ன கார் மாவட்டத்தில் பனுடா கிராமம் அமைந்துள்ளது. இங்கு இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய நிலையில் தற்போது இந்திய விமானப்படை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதோடு இந்த விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.