
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன். இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சளி மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வருகிறார்கள். அவருடைய உடல் நிலையை மூத்த மருத்துவ குழு கண்காணித்து வருகிறது.
இருப்பினும் உடல்நலம் குறித்த அறிக்கை வெளியாகவில்லை. மேலும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நுரையீரல் சளி காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மற்றொரு அரசியல் கட்சி தலைவரும் மருத்துவமனையில் உடல் நலம் சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.