சென்னையில் கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் நகர், மாம்பலம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் வெளியே செல்ல முடியவில்லை. மேலும், சென்னை, தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, குமரி, நெல்லை, காஞ்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.