மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு மத்தியில் நிதியமைச்சர் என்ற பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உயிர் காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்தது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. உயிர் காக்கும் மருந்துகள் விலை இல்லாமல் கிடைக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு உயிர் காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.