
தெலுங்கானாவில் பெண் ஒருவர் மயோனைஸ் சாப்பிட்டு உயிரிழந்தார். இதன் எதிரொலியாக தற்போது ஒரு வருடத்திற்கு மயோனைஸ் பயன்படுத்த தெலுங்கானா அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மயோனைஸ் என்பது முட்டை, எண்ணெய் மற்றும் சோடியம் நிறைந்த உப்பு போன்றவைகளால் தயார் செய்யப்படுவதாகும். இது அதிக கலோரி கொண்டது. இதனை சாண்ட்விச், பர்கர், ஸ்வர்மா, கிரில் சிக்கன் மற்றும் மோமோஸ் போன்றவைகளுடன் கலந்து சாப்பிடும் நிலையில் சமீபத்தில் மோமோஸ் உடன் கலந்து மயோனை சாப்பிட்ட பெண் உயிரிழந்துவிட்டார்.
அதோடு ஹைதராபாத்தில் ஒரு கடையில் ஸ்னாக்ஸுடன் மயோனைஸ் சாப்பிட்டவர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் 31 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பலியான நிலையில் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் இதன் எதிரொலியாக தற்போது தெலுங்கானா அரசு ஒரு வருடத்திற்கு மயோனைஸ் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.