
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கூறியதாவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களை இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். வக்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள்.
கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறு சீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். ஒன்றியத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும் கேரள முதலமைச்சரும் தான் என கூறியுள்ளார்.