
மதிமுக முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததை துரை வைகோ வாபஸ் பெற்றார்.
மல்லை சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என வைகோ கூறியுள்ளார்
துரை வைகோ, மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற வைகோ அறிவுறுத்தியுள்ளார்.
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து ராஜினாமா முடிவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என துரை வைகோ, மல்லை சத்யா அறிவித்தனர்