காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தற்போது பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக முறியடிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

அதன்படி பாகிஸ்தானில் உள்ள முக்கிய ராணுவ தளங்கள் மற்றும் கராச்சி துறைமுகம் என பல இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள 14 நகரங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில் ஜம்முவின் 7-வது படை பிரிவை சேர்ந்த இராணுவ வீரர்கள் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காயம் பெரிய அளவில் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதால் தற்போது எல்லை கட்டுப்பாடு பகுதியில் உள்ள மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இனி இந்தியாவின் மீது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அது போராகவே கருதப்படும் என மத்திய அரசு பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளது