
புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் சுமார் ரூ.12,700 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பள்ளி மாணவர்கள் முதல் மீனவர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இந்த வருடம் முதல் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்பிறகு ரேஷன் கார்டுகள் புதிதாக வழங்குதல், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளும் நடைபெறும். மேலும் பொது மக்களுக்கு விலையில்லா அரசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சர்க்கரை போன்றவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.