
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ள நிலையில் உருவாகியுள்ள நிலையில் இது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நாளை அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ள தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நாளை மிக அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு முழுமையான விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.