
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. பிரதமரும் ஆளுநரும் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினை குறித்து எடுத்துரைத்ததாகவும் தகவல் வெளியானது.