மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம் எனக் கூறி இந்து அமைப்பினர் போராட்டம் அறிவித்ததால் மதுரையில் நேற்று மற்றும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற இந்து அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் மலை மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு போராட்டம் நடத்த முயன்ற காடேஸ்வர சுப்பிரமணி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இன்று இந்து அமைப்பினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் எச். ராஜா தடையை மீறி திருப்பரங்குன்றம் செல்ல முயற்சித்தார்.

இதன் காரணமாக தற்போது அவரை காவல்துறையினர் கைது செய்து வீட்டு சிறையில் வைத்துள்ளனர்.