பாஜக கூட்டணியில் இணைந்ததால், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் விலகியுள்ளார். பாஜக கூட்டணியில் இணைவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஜி.கே.வாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அசோகன், ‘பாஜக கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தமாகாவில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.