தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதன் காரணமாக தற்போது அதிமுக கட்சியின் முன்னால் எம்எல்ஏ கேஏயு. அசனா அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது கடந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் காரணம்.

அப்படி இருந்தும் மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது சிறுபான்மை மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து விலக்குகிறேன் என்று அறிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்ட முடிவை விரைவில் எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.