
பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள ரயில் நிலையத்தில் பிகனேர்- மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பிரதமர் மோடி பேசியதாவது, பாரதமாதாவின் சேவகனான மோடி நெஞ்சை நிமிர்த்து இங்கே நிற்கிறேன். மோடியின் எண்ணம் நிதானமாக தான் இருக்கும். ஆனால் மோடியின் ரத்தம் கொதிக்கிறது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை. சிந்தூர்தான் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்துரை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது. பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம். மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம். 3 படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாக்.-ஐ மண்டியிட வைத்தனர்
இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது. இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது. பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறியுள்ளார்.