
இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்க்கவே நடத்தப்பட்டது.
9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது. அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கிய பயிற்சி முகாம்களை அழித்தோம். இதனால் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக காந்தாக்கர் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவ்ப், முடாசிர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் எங்களுடைய மோதல் என்பது தீவிரவாதிகளுடன் மட்டும்தான் பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல என்று கூறினார்கள்.
#WATCH | Delhi: Air Marshal AK Bharti shows the detailed missile impact video at Bahwalpur terror camp. #OperationSindoor pic.twitter.com/OnT5sdwrND
— ANI (@ANI) May 11, 2025
இது தொடர்பாக ராணுவ நடவடிக்கைக்காண தலைமை இயக்குனர் ராஜீவ் கய் கூறும் போது, மிகவும் ஆபத்தான பயங்கரவாத முகாம்களை பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாகிஸ்தான் தாக்குதலை அதிகப்படுத்தியது. ராணுவ தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அனைத்து நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டது. இந்திய ராணுவ தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றார். மேலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்ட முழு வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.