ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அழித்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகள் முறியடித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறியதால் இனி தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரித்தார்.

இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை தாக்கியுள்ளது பாகிஸ்தான்.

நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், வீடுகள் ஆகியவற்றை இலக்கு வைத்து தாக்கியுள்ளது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியா அழித்ததை உலகமே பார்த்தது என கூறியுள்ளார்.